இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகளவில் குறைந்து, சில மாநிலங்களில் மட்டுமே புதிய தொற்றுக்கள் பதிவாகி வந்தாலும், உலக நாடுகளைத் தற்போது பயமுறுத்தி வகும் குரங்கு அம்மை (MonkeyPox) தொற்று பரவல் மூலம் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் தனது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைப்பது குறித்து உறுதியான முடிவை எடுக்க முடியாமல் உள்ளது.
இந்த நிலையில் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ நிறுவனங்கள் ஊழியர்கள் அலுவலகத்திற்கு அழைப்பது குறித்தும், வொர்க் பர்ம் ஹோம்-ஐ நிறுத்துவது குறித்து முடிவை தெரிந்துகொள்வது மிகவும் அவசியமாக உள்ளது.
குழந்தைகளுக்கான ஆதார் கார்டு.. எப்படி விண்ணப்பிப்பது.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ..!
ஐடி நிறுவனங்கள்
சில வாரங்களுக்கு முன்பு அனைத்து முன்னணி ஐடி சேவை நிறுவனங்களும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைப்பதற்கான அறிவிப்புகளையும், ஏற்பாடுகளையும் செய்தது. ஆனால் இப்போது நிலைமை சற்று மாறியுள்ளது.
ஊழியர்கள் வெளியேற்றம்
இதற்கிடையில் புதிய கொரோனா தொற்று பரவல் மற்றும் திடீர் ஊழியர்கள் வெளியேற்றமும் அதிகரித்த நிலையில், அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் திட்டத்தைத் தடாலடியாக அறிவித்தது.
நிரந்தரமாக WFH
இதைத் தொடர்ந்து சந்தையில் நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்றும் வகையில் பல வேலைவாய்ப்புகள் உருவானது இது ஐடி நிறுவனங்களில் இருந்து வெளியேறும் பலருக்கு உதவியது, ஆனால் இதேவேளையில் ஐடி நிறுவனங்களுக்குத் தலைவலியாக மாறியது.
உயர் அதிகாரிகள்
இந்நிலையில் நாட்டுடன் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ ஆகியவை ஏற்கனவே உயர் அதிகாரிகளை அலுவலகத்திற்கு அழைத்துள்ள நிலையில் அவை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது.
டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ
மேலும் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான அனுமதியை வழங்க தயாராக இருப்பது மட்டும் அல்லாமல், ஊழியர்கள் உடனடியா அலுவலகத்திற்கு அழைக்கும் திட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.
2 லட்ச பிரஷ்ஷர்கள்
இதேவேளையில் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ ஆகிய அனைத்து நிறுவனங்களும் ஹைப்ரிட் மாடலை நீண்ட கால அடிப்படையில் அமல்படுத்த உறுதியாக உள்ளது. இதேபோல் ஊழியர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க 2 லட்சத்திற்கும் அதிகமான பிரஷ்ஷர்களைப் பணியில் சேர்க்க திட்டமிட்டு உள்ளதால் அவர்கள் அனைவரையும் அலுவலகத்திற்கு வரவழைக்க முடிவு செய்துள்ளது.
வொர்க் பரம் ஹோம் தொடரும்
இதனால் அனைத்து ஐடி ஊழியர்களும் வீட்டில் இருந்து பணியாற்றுவது அடுத்தச் சில மாதங்களுக்குத் தொடரலாம். அதேபோல் பிரிட்டன், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளின் இந்திய கிளைகள் பெரும்பாலானவை தனது ஊழியர்களைக் கட்டாயமாக வீட்டிற்கு அழைத்துள்ளது.
TCS, Infosys, HCL Work from Home update; When IT employees need to go office
TCS, Infosys, HCL Work from Home update; When IT employees need to go office WFH முக்கிய அப்டேட்: டிசிஎஸ், இன்போசிஸ் முடிவு என்ன..?