Xiaomi: சீனாவின் பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான
சியோமி
, உலக நாடுகளில் தனது போன்கள் மற்றும் டெக் கேட்ஜெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், நிறுவன பயனர்கள் வசதிக்கேற்ப பல மேம்பாடுகளை செய்துவருகிறது.
அந்த வகையில் நிறுவனம் ஜெர்மனின் பிரபல கேமரா தயாரிப்பு நிறுவனமான லெய்கா (Leica) உடன் கூட்டணி அமைத்துள்ளது. வரும் காலங்களில் வெளியிடப்போகும் பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் இந்த கேமராக்கள் இருக்கும் என்று நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Bill Gates: தல… என்ன போன் வெச்சிருக்கார் தெரியுமா – ஆனா சத்தியமா நீங்க நெனச்சது இல்ல!
புதிய கூட்டணி
முன்னதாக, சீனாவின் ஹுவாய் மொபைல் தயாரிப்பு நிறுவனம் தான் லெய்க்காவுடன் கூட்டணி வைத்து ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வந்தது. மேலும், சமீபத்தில் விவோ நிறுவனம் தனது பிளாக்ஷிப் x80 ஸ்மார்ட்போன்களை Zeiss ஆப்டிக்ஸ் லென்சுடன் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
Redmi Note 11T Series: அடுத்த ஆட்டத்துக்கு தயாராகும் ரெட்மி – கசிந்த புதிய தகவல்கள்!
வளர்ந்து வரும் சமூக வலைத்தள மோகங்களின் காரணமாக, டெக் துறை இன்னும் பல வளர்ச்சி காண ஏங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பயனர்களுக்கு நல்ல கேமராக்கள் மீதான மோகம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
TRAI: நம்பர் இல்லணாலும் பராவால்ல… இனி அழைப்பவரோட ஆதார் பெயர் போன்ல காட்டும்!
கேமராக்களின் தரம் மாறும்
கேமராக்கள் நல்லதாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஸ்மார்ட்போன் பயனர்களும் விரும்புகின்றனர். இதனை சரியாகப் புரிந்துகொண்ட சியோமி நிறுவனம், தனது ஸ்மார்ட்போன்களில் பெரிய குறையாக இருந்ததை தற்போது நிவர்த்தி செய்துள்ளது.
Made in India: மலிவான 4ஜி போனை வெளியிட்ட லாவா – ஆனா அம்சங்கள் டாப் டக்கர்!
மேலும், இது மிக விரைவில் அரங்கேறும் என்று தெரிகிறது. காரணம், சியோமி அடுத்த மாதம் வெளியிடவுள்ள சியோமி 12 அல்ட்ரா (
Xiaomi
12 Ultra) ஸ்மார்ட்போன்களில் இந்த கேமரா இடம்பெறலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. சமீபத்தில் நிறுவனம் 12 ப்ரோ 5ஜி பிளாக்ஷிப் போனை அறிமுகம் செய்திருந்தது நினைவுக்கூரத்தக்கது.
VIP Number: விஐபி நம்பரை வீட்டுக்கே வந்து இலவசமாக தரும் வோடபோன் ஐடியா!
குஷியான சியோமி வாடிக்கையாளர்கள்
லெய்கா கேமரா
நிறுவனத்தின் மிகவும் நன்கு அறியப்பட்ட, மிகவும் வெற்றிகரமான கூட்டாண்மை இதுவரை Huawei உடன் இருந்தது. ஆனால் அந்த நிறுவனம் இன்னும் பல்வேறு அமெரிக்க அரசாங்கத் தடைகளை எதிர்கொண்டு வருவதால், Leica தனது வழியை மாற்றிக்கொள்ள தற்போது தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
5G In India: வெளியானது 5ஜி அறிவிப்பு – செப்டம்பர் முதல் சேவை தொடங்கும்!
மேலும், லெய்கா உடன் சியோமி இணைந்தால், கேமரா தரம் மட்டுமில்லாமல், கேமரா இண்டர்ஃபேஸ், பிக்சர் எஞ்சின் போன்றவற்றிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். இது, வேறு தரத்திற்கு சியோமி நிறுவனக் கேமராக்களைக் கொண்டு செல்லும் என பயனர்கள் கொண்டாடி வருகின்றனர்.
JioPhone Next: மிகப்பெரும் தள்ளுபடி விலையில் ஜியோ 4ஜி போன் – விலைய பாத்து ஷாக் ஆகிடாதீங்க!
சியோமி 12 ப்ரோ 5ஜி அம்சங்கள்
சியோமி 12 ப்ரோ 5ஜி போனில் 6.73″ இன்ச் E5 2K AMOLED டிஸ்ப்ளே, 120Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், 480Hz டச் சாம்பிளிங் ரேட், 1500 nits வரை பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு போன்ற அம்சங்கள் உள்ளது.
Vivo X80 launch: போன் வடிவில் சினிமா கேமரா – முன்பதிவு செய்துவிட்டீர்களா!
இந்த போன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI 13 ஸ்கின் மூலம் இயங்குகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கேமராவைப் பொருத்தவரை, முதன்மை சென்சாராக Sony 50MP மெகாபிக்சல் OIS கேமரா, அதனுடன் 50MP மெகாபிக்சல் போட்ரெய்ட் சென்சார், 50MP மெகாபிக்சல் அல்ட்ரா வைட் சென்சார் ஆகியவை கொண்ட டிரிப்பிள் ரியர் கேமரா உள்ளது. செல்பி எடுக்க 32MP மெகாபிக்சல் கேமரா பஞ்ச் ஹோலில் வழங்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 4,600mAh பேட்டரியும், இதனை ஊக்குவிக்க 120W வாட் சோனிக் சார்ஜரும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் தொடக்க விலை சலுகைகளுடன் ரூ.52,999 ஆக உள்ளது.