தமிழக பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசி, ஆந்திராவுக்கு கடத்தப்பட்டு வருவதாக, தமிழக முதல்வருக்கு, ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவருமான என். சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக ரேஷன் கடைகளில் மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசியை, ஆந்திராவுக்கும் கர்நாடகத்திற்கும் கடத்தப்பட்டு, கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.