டோக்கியா: ஜப்பான் தலைநகர் டோக்கியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார். அங்கு ஏராளமான ஜப்பானிய குழந்தைகள், இந்திய தேசிய கொடிகளுடன் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று வரவேற்றனர்.
அப்போது ஜப்பானிய சிறுவன் வைசுகி இந்தியில் பேசினான். அவனது இந்தி புலமையை பார்த்து வியந்த பிரதமர் மோடி, “வாவ், எங்கு இந்தி கற்றாய், அழகாக பேசுகிறாயே” என்று வினவினார். அந்த சிறுவனோடு சிறிது நேரம் கலந்துரையாடினார்.
இதன்பிறகு சிறுவன் நிருபர்களிடம் கூறும்போது, “எனக்கு முழுமையாக இந்தி தெரியாது, எனினும் எனது இந்தி வார்த்தைகளை பிரதமர் நரேந்திர மோடி புரிந்து கொண்டார். எனக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்தான்.