26/11 மும்பை மற்றும் பதான்கோட் தாக்குதல்கள் உட்பட பயங்கரவாத தாக்குதல்களுக்கு எங்கள் கண்டனத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2593 (2021)-ம் நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். இது ஆப்கானிஸ்தானை இனி எந்த நாட்டையும் அச்சுறுத்தவோ அல்லது தாக்கவோ பயன்படுத்தக்கூடாது என்றும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு நிதியளிக்க வேண்டும் என்றும் மாநாட்டிற்கு பின் குவாட் அமைப்பு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பேசிய பிரதமர் மோடி, குறுகிய காலத்தில் உலகில் குவாட் அமைப்பு தனக்கென ஒரு முக்கிய இடம் பிடித்துள்ளது. குவாட்டின் தொலைநோக்கு பார்வை இன்று விரிவடைந்துள்ளது. அதன் செயல்முறை சிறந்த வடிவம் பெற்றுள்ளது. நம்முடைய பரஸ்பர நம்பிக்கை மற்றும் மனவுறுதி ஆகியவை ஜனநாயக சக்திகளுக்கு புதிய ஆற்றலும் மற்றும் ஆர்வமும் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்றின் கடினம் நிறைந்த சூழலிலும் உறுப்பு நாடுகள் பரஸ்பர ஒத்துழைப்பினை வழங்கின. தடுப்பூசி வினியோகம், பருவகால செயல்முறை, இடர்பாடுகளில் இருந்து மீண்டெழும் திறன், பேரிடர் மேலாண்மை மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் பரஸ்பர ஒருங்கிணைப்பு அதிகரித்திருந்தது. இதனால், இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, வளம் மற்றும் ஸ்திர தன்மை ஆகியவை உறுதி செய்யப்பட்டது என கூறியுள்ளார்.
இதேபோன்று ஆஸ்திரேலிய தேர்தலில் வெற்றி பெற்று புதிய பிரதமரான அந்தோணி அல்பேனீசுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தினையும் தெரிவித்து கொண்டார். பதவியேற்று 24 மணிநேரத்தில் எங்களுடன் இந்த உச்சி மாநாட்டில் நீங்கள் கலந்து கொண்டுள்ளது குவாட் நட்புறவின் வலிமையையும் மற்றும் அதில் உங்களது ஈடுபாட்டையும் பிரதிபலிக்கிறது என்று கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்..
பகவந்த் மானின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை கண்ணீரை வரவழைத்தது- அரவிந்த் கெஜ்ரிவால் நெகிழ்ச்சி