இரட்டை கொலை செய்துவிட்டு 8 ஆண்டுகளாக தலைமறைவு.. சிக்கன் பக்கோடாவால் சிக்கிய கொலையாளி..!

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தாய், மகனை வெட்டிக் கொலை செய்துவிட்டு 8 ஆண்டுகளாக போலீசாருக்கு போக்கு காட்டி வந்த நபரை ஆந்திராவில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

கணவனை இழந்த குணசுந்தரி என்ற பெண்ணுக்கு 7 வயதில் மகேஷ் என்ற மகன் இருந்தார். கடந்த 2014ம் ஆண்டு குணசுந்தரி, ஆந்திராவைச் சேர்ந்த ராஜ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

குணசுந்தரி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்த ராஜ், கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற குணசுந்தரியையும் அவரது மகனையும் கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.

தனிப்படை போலீசார் ராஜை தேடி வந்த நிலையில், சத்தியவேடு பகுதியில் உள்ள சிக்கன் பக்கோடா கடைக்கு அடிக்கடி ராஜ் வருவது தெரிய வந்ததையடுத்து போலீசார் அவனை சுற்றி வளைத்து பிடித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.