சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் சிம்பு, சத்தமில்லாமல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் எந்த தமிழ் நடிகருக்கும் இல்லாத அளவுக்கு அதிகமான ஃபாலோயர்ஸை நடிகர் சிம்பு பெற்றுள்ளார்.
அஜித், விஜய், ரஜினி ஆகியோர் இன்ஸ்டாகிராமில் இல்லாத நிலையில், கமலுக்கு 1.6 மில்லியன் ஃபாலோயர்சும், விஜய் சேதுபதிக்கு 5 மில்லியன் ஃபாலோயர்சும், தனுஷுக்கு 4.2 மில்லியன் ஃபாலோயர்சும் உள்ளனர். சூர்யா 4.3 மில்லியன்ஸ் ஃபாலோயர்ஸை பெற்றிருக்கிறார்.
2020இல் அக்டோபர் 20 ஆம் தேதி சிம்பு முதன்முறையாக இன்ஸ்டாகிராம் போஸ்ட் பதிவிட்டார். அக்டோபர் 22 ஆம் தேதி, உடல் எடையை குறைத்து புதிய தோற்றத்தில் இருக்கும் வீடியோவை பதிவிட்டார். அன்று முதல், சிம்புவின் இன்ஸ்டா பக்கத்திற்கு ஃபாலோயர்ஸ் அதிகரிக்க தொடங்கினர். அன்று முதல், பல விதமான போட்டோஷீட், பட அறிவிப்புகள் போன்றவற்றை தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார். கடைசியாக மே 13 அன்று அவர் கருப்பு லெதர் ஜாக்கெட் புகைப்படத்திற்கு, லட்சக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். 143 பதிவுகளை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார்.
மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களை பின்னுக்கு தள்ளி நடிகர் சிம்பு சாதனை படைத்திருப்பது, அவரது ரசிகர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது.
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. தற்போது, அவர் நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.