உக்ரைனில் உள்ள உணவு தானியங்களை ரஷ்ய கப்பல்கள் திருடிச்செல்வது போன்ற செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் உணவு தானிய ஏற்றுமதியில் முக்கிய நாடாக விளங்கும் உக்ரைன் மீது ரஷ்யா மூன்று மாதங்களாக தங்களது போர் தாக்குதலை நடத்தி வருகிறது.
அத்துடன் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் உணவு தானியங்களையும் ரஷ்ய போர் கப்பல் தடுத்து நிறுத்தியுள்ளன, இதனால் உலக அளவில் கடுமையான தானிய தட்டுபாடு ஏற்பட்டதுடன், அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றமும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், உக்ரைனில் உள்ள உணவு தானியங்களை ரஷ்ய கேரியர் கப்பல்கள் திருடி செல்வது போன்ற செயற்கைக்கோள் புகைப்படங்களை Maxar டெக்னாலஜிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்யா, சீனா கூட்டு ராணுவப் பயிற்சி! அமெரிக்கா தீவிர கண்காணிப்பு
இந்த செயற்கைக்கோள் புகைப்படங்கள், உக்ரைனின் செவஸ்டபோல் துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்களை ரஷ்ய படைகளின் Matros Pozynich மற்றும் Matros Koshka என்ற கேரியர் கப்பல்கள் ஏற்றி செல்ல்வதை காட்டுகின்றது என்று Maxar டெக்னாலஜிஸ் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.