உக்ரைனின் தெற்கில் உள்ள கெர்சனில் ரஷ்யா நியமித்த நிர்வாகம், அதன் பிராந்தியத்தில் ராணுவத்தளம் அமைக்க ரஷ்யாவிடம் கோரும் என அரசாங்க அதிகாரியை மேற்கோள் காட்டி RIA செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கெர்சனின் “சிவில்-இராணுவ பிராந்திய நிர்வாகம்” என்று ரஷ்யா அழைக்கும் துணைத் தலைவரான Kirill Stremousov, கெர்சன் பிராந்தியத்தில் ரஷ்ய ராணுவ தளம் இருக்க வேண்டும் என RIA-யிடம் கூறியுள்ளார்.
இதற்காக நாங்கள் ரஷ்யாவிடம் கோரிக்கை விடுப்போம் மற்றும் கெர்சனின் ஒட்டுமொத்த மக்களும் இதைத்தான் விரும்புகிறார்கள்.
இது அத்தியாவசியம் மற்றும் இது பிராந்தியம் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்கான உத்தரவாதமாக இருக்கும் என Kirill Stremousov தெரிவித்துள்ளார்.
நாளைக்கே கூட இதற்கு தயாராக இருக்கிறேன்! ரஷ்யாவுக்கு ஜெலன்ஸ்கி முக்கிய அறிவிப்பு
தெற்கு உக்ரைனில் உள்ள டினீப்பர் நதி மற்றும் கருங்கடல் இரண்டையும் கொண்டிருக்கும் கெர்சன் நகரம் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்த முதல் பிராந்தியங்களில் ஒன்றாகும்.