நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சர்வதேச அளவில் பல்வேறு நெருக்கடியான நிலைகள் இருந்து வருகின்றன. ஆரம்பத்தில் கொரோனா, லாக்டவுன், பொருளாதாரம் வீழ்ச்சி, தற்போது ரஷ்யா உக்ரைன் பிரச்சனை, சீனாவின் கடுமையான கட்டுப்பாடுகள் என பல்வேறு நெருக்கடிகள் இருந்து வருகின்றன. இதன் காரணமாக நிதி சந்தைகள் மிக மோசமாகவே இருந்து வருகின்றன.
குறிப்பாக பங்கு சந்தைகள் பலமான சரிவினைக் கண்டு வருகின்றன. இந்த காலகட்டத்தில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம். எதில் தான் முதலீடு செய்வது என்ற பல கேள்விகள் எழுந்திருக்கும்.
இதற்கிடையில் பிரபல எழுத்தாளாரான ராபர்ட் கியோசாகி, அவர் எழுதிய பிரபலமான பர்சனல் பைனான்ஸ் புத்தகம் Rich Dad Poor Dad-ன் எழுத்தாளராவர். இவர் தனது ட்விட்டரில் வரவிருக்கும் உலகளாவிய நிதி நெருக்கடியைப் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை, பெங்களூரை விடுங்க.. மும்பை பணியமர்த்தலில் 41% வளர்ச்சி.. சம்பள வளர்ச்சி எவ்வளவு தெரியுமா?
சேமித்து வையுங்கள்
மேலும் ட்விட்டரில் வரவிருக்கும் உலகளாவிய நெருக்கடியினை எதிர்கொள்ள, உணவு, பிட்காயின், தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை சேமிக்க கூறியுள்ளார்.
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு உலகம் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது. இதனால் உலகத் தலைவர்கள் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க கூடும். இதனால் மக்கள் உணவு, பிட்காயின், விலைமதிப்பற்ற உலோகங்கள் என பலவற்றையும் சேமிக்க தொடங்க வேண்டும் என கூறியுள்ளார்.
ட்விட்டர் பதிவு
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், இரண்டாம் உலகப்போருக்கு பிறகு உலகம் மிகப்பெரிய நிதி சவால்களை எதிர்கொண்டுள்ளது. உலகளாவிய பேரழிவு வருகின்றது. நம்பிக்கையற்ற தலைவர்கள் அவ நம்பிக்கையான விஷயங்களை செய்வார்கள். கடவுளே எங்கள் மீது கருணை காட்டுங்கள், தங்கம், வெள்ளி, உணவு,துப்பாக்கிகள், தோட்டாக்களை சேமியுங்கள் என பதிவிட்டுள்ளார்.
பிட்காயினுக்கு ஆதரவு
கியோசாகி பிட்காயினை ஆதரிப்பது இது முதல் முறை அல்ல. முன்னதாக பிட்காயினின் பலன்கள் குறித்து பலமுறை சுட்டிக் காட்டியுள்ளார். சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பிட்காயின் பணத்தின் எதிர்காலம் என்றும் சுட்டிக் காட்டியது குறிப்பிடத்தக்கது.
விமர்சனம்
மற்றொரு ட்விட்டர் பதிவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஃபெடரல் வங்கியின் கருவூல செயலாளர் ஜேனட் யெல்லன், தலைவர் ஜெரோம் பவல் ஆகியோரை, கிரிப்டோகரன்சிகள் மீதான கட்டுப்பாட்டுக்கு கொள்கைகளுக்காக கடுமையாக விமர்சித்தார். அதோடு பிட்காயின் வெற்றி பெறும் என்றும் சுட்டி காட்டினார்.
பிட்காயின் சரிவு
இன்னொரு ட்வீட்டில் பிட்காயின் சரிவின் போது வாங்க ஊக்குவிக்கிறது. கிரிப்டோ சந்தைகளில் உள்ள பயம் மற்றும் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் வீழ்ச்சி காணவில்லை என கூறியுள்ளார்.
கிரியோசாகி சொல்வதைபோல் பிட்காயின், விலை உயர்ந்த ஆபரணங்களை சேமிக்காவிட்டாலும், எதிர்வரும் நிச்சயமற்ற எதிர்கால நலன் கருதி நிச்சயம் பாதுகாப்பானவற்றில் முதலீடு செய்வது நல்லது தானே.
Famous writer Robert kiyosaki alert of financial crisis; asks save to food, bitcoin, gold & silver
Famous writer Robert Kiyosaki has called for saving food, bitcoin, gold and silver in the face of the impending global crisis.