நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பாதாள உலகக்குழுவின் அட்டகாசம் தீவிரம் அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடுவெல பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாதாள குழுவினர் அட்டகாசம் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
எரிபொருள் நிலையங்களுக்கு வரும் ரவுடிகள், பொலிஸார் முன்னிலையில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களையும், வரிசையில் நிற்கும் மக்களையும் அச்சுறுத்தி தங்களின் வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுச் செல்கின்றனர்.
பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்ப்பு வெளியிடும் மக்களை பொலிஸார் முன்பாகவே அச்சுறுத்தி தாக்கும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இதனால் வரிசையில் நிற்கும் மக்கள் தற்போது வரையிலும் உயிர் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் பாதாள உலக குழுவினர் அச்சுறுத்துவதை கைவிட்டு தம்மை நிம்மதியாக வாழ அனுமதிக்குமாறு கடுவெல பிரதேச மக்கள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலைமையினால் எதிர்வரும் நாட்களில் குறித்த பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.