ஏமனில் சுட்டு வீழ்த்தப்பட்ட சவுதி உளவு விமானம்.. 3 பேர் உயிரிழப்பு..!

ஏமன் தலைநகர் சனாவில் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 3 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா தலைமையிலான ராணுவ கூட்டப்படைகளின் உளவு விமானத்தை ஹவுதி படைகள் சுட்டு வீழ்த்தின.

இந்த விமானம் சனாவில் உள்ள மால் ஒன்றிற்கு அருகில் விழுந்து நொறுங்கியது.

இதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட்டு வீழ்த்தப்பட்ட சவுதி விமானப்படைக்கு சொந்தமான CH4 உளவு விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்டது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.