ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி: ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி


2022ம் ஆண்டுக்கான ஐபிஎல்-யின் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து நடைப்பெற்ற 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல்-யின் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து முதல் பேட்டிங்கில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்கள் குவித்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகப்பட்சமாக ஜோஸ் பட்லர் பொறுப்புடன் விளையாண்டு 56 பந்துகளில் 12 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 89 ஓட்டங்களை சேர்த்தார்.

இதையடுத்து 189 ஓட்டங்கள் என்ற சற்றுக் கடினமான இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது, தொடக்க வீரராக களமிறங்கிய விருத்திமான் சஹா ஒட்டங்கள் எதுவும் குவிக்காமல் பெவிலியனுக்கு திரும்பினார்.

இதனைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான கில், மேத்யூ வேட், கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் தங்களது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் முலம் குஜராத் அணியை வெற்றிப்பாதைக்கு மீண்டும் கொண்டு சென்றனர்.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் அதிகப்பட்சமாக டேவிட் மில்லர் 38 பந்துகளில் 3 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களுடன் 68 ஓட்டங்களை சேர்த்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வதில் முக்கிய பங்காற்றினார்.

ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி: ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி

கூடுதல் செய்திகளுக்கு: மரியுபோலில் வைக்கப்பட்ட கண்ணிவெடிகள்…ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள புதுத் தகவல்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான இந்த வெற்றியின் முலம் குஜராத் அணி 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல்-யின் தொடரின் முதல் அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.