சென்னையில் ஒருதலை காதலால் மனமுடைந்த 12-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை அம்பத்தூர் பானு நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன் வேலுமணி. இவர் அம்பத்தூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்தார். அண்மையில் பொது தேர்வு முடிந்து வீட்டில் இருந்த நிலையில் தாய் மற்றும் தந்தை இல்லாத நேரத்தில் வீட்டில் தனக்குத் தானே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்டமாக மாணவன் தான் பயின்று வந்த பள்ளியில் ஒரு தலைபட்சமாக பெண் ஒருவரை காதலித்ததாகக் கூறப்படுகின்றது. காதல் கூடிவராதக் காரணத்தால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகமடைந்துள்ளனர். இதுதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM