கோடைக்காலத்தில் இரண்டு விஷயம் முக்கியமானது ஒன்று வச்சு செய்யும் வெயில், இன்னோன்னு வெச்சு வெச்சு சாப்பிடும் மாம்பழம்.. இந்தியா முழுவதம் மாம்பழ விற்பனை களைக்கட்டியிருக்கும் வேளையில் ஒடிசா மாநில விவசாயி ஒருவர் ஒரு கிலோ மாம்பழத்தை 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றார்.
விலை ரொம்ப அதிகமன்னு நினைக்காதீங்க பென்ஸ், BMW காரில் வந்து வாங்கிச் செல்லும் அளவிற்குக் கூட்டம் அலை மோதுகிறதாம்..
ஒரு கிலோ மாம்பழம் 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யும் அளவிற்கு இதுல என்ன ஸ்பெஷல்..
என்னது.. ரெண்டு மாம்பழம் 3 லட்சமா..? வாயைப் பிளக்கவைக்கும் ஜப்பான் ‘மியாசாகி’ மாம்பழம்..!
மியாசாகி மாம்பழம்
ஒடிசாவில் உள்ள பர்கர் மாவட்டத்தின் நிலத்தார் கிராமத்தைச் சேர்ந்த சந்துரு சத்ய நாராயண் என்ற விவசாயி, உலகின் மிக விலையுயர்ந்த மியாசாகி மாம்பழத்தை இயற்கை முறையில் பயிரிட்டுள்ளார். மியாசாகி, ஒரு பிரத்யேக வகை மாம்பழம், உலகிலேயே மிக விலையுயர்ந்த மாம்பழமாக அறியப்படுகிறது.
3 லட்சம் ரூபாய்
பொதுவாக மாம்பழம் என்றால் மஞ்சளாகத் தான் இருக்கும், ஆனால் இந்த மியாசாகி பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும். சுவையும் அதிகப்படியான இனிப்பு உடன் இருக்கும் காரணத்தால் இதன் விலை ஒரு கிலோ ரூ. 2.5 முதல் 3 லட்சம் வரை விற்பனை செய்து வருகிறார்.
பங்களாதேஷ்
இந்த மாமர விதையைப் பங்களாதேஷ்-ல் இருந்து 3 வருடத்திற்கு முன்பு கொண்டு வந்ததாகச் சந்துரு சத்ய நாராயண் கூறும் வேளையில், இயற்கை முறையில் இந்த மரம் வளர்க்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளார். மாம்பழங்களை முறையாகச் சந்தைப்படுத்த மாநில அரசிடம் வேண்டுகோள்-ம் விடுத்துள்ளார் சந்துரு சத்ய நாராயண்.
வறட்சி
இது வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதி என்றபோதிலும் சந்துரு மியாசாகி மாம்பழத்தைப் பழங்களை அறுவடை செய்துள்ளார். உலகிலேயே விலை உயர்ந்த மாம்பழத்தை நம் மாநிலத்தில் பெறுவது பெருமைக்குரிய விஷயம் என்று இம்மாநில உதவி வேளாண் இயக்குநர் பாசுதேப் பிரதான்.
கர்நாடக அரசு
மேலும் கர்நாடக அரசு மாம்பழத்தை இந்தியா முழுவதும் விற்பனை செய்யும் பொருட்டு விவசாயிகளையும், மக்களையும் இணைக்கும் வகையில் karsirimangoes என்ற இணையத் தளத்தை உருவாக்கியுள்ளது. இத்தளத்தில் அல்போன்சா, பாதாமி, அபூஸ், ரஸ்புரி, மல்லிகா, ஹிமாம் பசந்த் மற்றும் கேசர் எனப் பல வகை மாம்பழங்களை விற்பனை செய்யப்படுகிறது.
Odisha Farmer sells World’s Costliest Miyazaki Mango at Rs 3 Lakh Per Kilo
Odisha Farmer sells World’s Costliest Miyazaki Mango at Rs 3 Lakh Per Kilo ஒரு கிலோ மாம்பழம் 3 லட்சம்.. ஒடிசா விவசாயிக்கு ஜாக்பாட்..!