கடலூர்: சிவனடியார்கள் வருகையால் திணறிய தில்லை… சிதம்பரம் போராட்டத்தின் பின்னணி என்ன?!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் குறித்தும், தில்லை காளி அம்மன் குறித்தும் தனியார் யூ-டியூப் சேனல் ஒன்று அவதூறாக செய்தி வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து அந்த செய்திக்கு இந்து அமைப்புகளும் சிவனடியார்களும் கண்டனம் தெரிவித்ததுடன், குறிப்பிட்ட அந்த செய்தியை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில்

அதேபோல அந்த தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுப்பதுடன், அதன் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்று கூறிய சிவனடியார்கள் கூட்டமைப்பு, நேற்று (23-ம் தேதி) அனைத்து சிவனடியார்களும் சிதம்பரத்திற்கு வருமாறும் அழைப்பு விடுத்திருந்தது. அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் இருக்கும் சிவனடியார்கள் நேற்று காலை முதலே சிதம்பரத்தில் குவிய ஆரம்பித்தனர்.

அதனால் கடலூர் மாவட்ட எஸ்.பி சக்தி கணேசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சுமார் 2,000-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் குவிந்ததால், போக்குவரத்து நெரிசலில் திணறியது சிதம்பரம். அதன்பிறகு நடராஜர் ஆலயத்தினுள் சென்ற சிவனடியார்கள் சிவ வாத்தியங்களை இசைத்து நடனமாடி, கனகசபை மீறி ஏறி தேவாரம் பாடி நடராஜரை வழிபட்டனர்.

நடராஜர்

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சிவனடியார்களுக்கும் மூன்று வேளைகளும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலையில் திருவாரூர் நடராஜன் சுவாமிகள், திருக்கழுங்குன்றம் சிவனடியார் தாமோதரன், கள்ளக்குறிச்சி பாசார் சிவபாலன், சென்னை சிவதாவூர் அடிகள் உள்ளிட்டவர்கல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் துவங்கியது.

அந்த ஆர்ப்பாட்டத்தில், ”நடராஜர் மற்றும் தில்லைக் காளி குறித்து அவதூறு செய்தியை வெளியிட்ட தனியார் யூ டியூப் தொலைக்காட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் பதிவாகியிருக்கிறது.

ஆனாலும் அந்த நிறுவனத்தின் மீதும், அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு அமைதியாக இருக்கிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் அவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர். அதன்பிறகு அங்கிருந்து சிவனடியார்கள் கலைந்து சென்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.