கர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்..!

கர்நாடக மாநிலம் ஷிமோகா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளன.

தடாசா கிராமத்தைச் சேர்ந்த ஆரிப் என்பவரது மனைவி, அல்மாஜா பானு கர்ப்பம் தரித்திருந்த நிலையில், பரிசோதனையில் வயிற்றில் 4 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.

நேற்று அதிகாலை பானுவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்தன.

தாயும் சேய்களும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.