ராஜஸ்தான்:
ராஜஸ்தான் மாநிலம், பிகானேர் மாவட்டத்தில் திருமணமான 45 வயது பெண், ஸ்ரீதுங்கர்கர் பகுதியில் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து போலீசார் கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த பெண்ணின் காதலன் போஜாசா பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அதன் பின்னர் நடைபெற்ற விசாரணையில் பெண்ணின் கணவர் தான், காதலனை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தனது காதலனை கணவர் கொலை செய்ததை அறிந்த அந்த பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.
அந்த பெண்ணின் உடல் பிகானேரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், உடற்கூறு ஆய்விற்கு பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.