குரங்கு அம்மை: அறிகுறி இருந்தால் உடனே தனிமை – தமிழக அரசு அவசர அறிவிப்பு

இங்கிலாந்தில் முதன்முதலாக தென்பட்ட குரங்கு அம்மை வைரஸ், தற்போது 12 நாடுகளுக்கு பரவியுள்ளது. இங்கிலாந்தில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் நைஜீரியாவிற்கு பயண வரலாற்றைக் கொண்டிருந்தாலும், மற்றவர்களுக்கு எப்படி பரவியதற்கான காரணத்தை சுகாதாரத் துறையினர் கண்டறிந்து வருகின்றனர். இந்த வைரஸின் பூர்விகமாக நைஜீரியா உள்ளது.

இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இதுவரை 80 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், 50 பேர் கண்காணிப்பு வட்டத்தில் உள்ளனர். கண்காணிப்பை அதிகரிக்கும் போது,பாதிப்புகள் அதிகரிக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகவில்லை என்றாலும், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநகராட்சி ஆணையர்களுக்கும் சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, உலக சுகாதார அமைப்பு குரங்கு அம்மை பல நாடுகளில் பரவி வருவதாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் குரங்கு அம்மை தடுப்பு சுகாதார நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

இதுவரை கண்டறியப்படாத தோலில் ஏற்படும் கொப்புளங்கள் உடையவர்களையும், குரங்கு அம்மை சந்தேகிக்கும் நாடுகளுக்கு கடந்த 21 நாள்களில் பயணம் செய்தவர்களின் விவரங்களை கண்டறிந்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

குரங்கு அம்மை அறிகுறிகள் உள்ள நோயாளிகள் உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும். பாதிப்பு உறுதியான நபர்களுடன் தொடர்பிலிருந்தவர்களையும் தனிமைப்படுத்தி பரிசோதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

குரங்கு அம்மை அறிகுறிகள்

காய்ச்சல் தொடங்கி ஒன்றில் இருந்து மூன்று நாள்களுக்குள் அரிப்பு ஏற்படுகிறது. முகத்தில் தோன்றும் இந்த அரிப்பு பின்னர் கைகள், உள்ளங்கால்களுக்குப் பரவுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.