புதுடெல்லி:
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் நேற்று நடைபெற்றது. இந்த 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற இந்த 2-வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனீஸ், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
டோக்கியோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, பிரதமர் மோடியின் 2 நாள் ஜப்பான் பயணம் நிறைவு பெற்றது. இதனல் அவர் தனி விமானம் மூலம் நேற்று இரவு டெல்லி புறப்பட்டார்.
இந்நிலையில், ஜப்பானில் குவாட் உச்சி மாநாட்டை முடித்துக்கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இன்று காலை டெல்லி வந்தடைந்தார்.