டோக்கியோ:
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். மாநாட்டுக்கு இடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை தனித்தனியே சந்தித்தார்.
அப்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி சஞ்சி கலை ஓவிய தொகுப்பைப் பரிசாக வழங்கினார்.
சஞ்சி ஓவியம் என்பது கிருஷ்ணரின் வழிபாட்டு முறையிலிருந்து தோன்றி, உத்தர பிரதேசத்தில் செழித்து வளர்ந்த கலை பாரம்பரியம். சஞ்சி என்பது காகிதத்தில் கையால் டிசைன்களை வெட்டும் கலை. இந்த ஓவியம் இப்பகுதியின் நாட்டுப்புற கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது. இது 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் வைணவ கோவில்களில் அதிகம் காணப்பட்டது. இந்த சஞ்சி கலை ஓவிய தொகுப்பு, தேசிய விருது பெற்ற கலைஞரால், மதுராவிலிருந்து வரும் தாக்குராணி மலைகளை பற்றிய கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டது.
இதேபோல், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ்க்கு பிரதமர் மோடி கோண்ட் கலை ஓவியத்தை பரிசாக வழங்கினார்.
கோண்ட் ஓவியங்கள் மிகவும் போற்றப்படும் பழங்குடியினரின் கலை வடிவங்களில் ஒன்றாகும். கோண்ட் என்ற வார்த்தை கோண்ட் என்ற சொல்லிலிருந்து வந்தது, அதாவது பச்சை மலை. இதையடுத்து, விரைவில் இந்தியா வருமாறு ஆஸ்திரேலிய பிரதமருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
மேலும், ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு ரோகன் ஓவியம் வரைந்த மரத்தால் செய்யப்பட்ட கைவினைப் பெட்டியை பரிசாக வழங்கினார்.
இதையும் படியுங்கள்…ஈரானில் 10 மாடி கட்டிடம் இடிந்து விபத்து- 5 பேர் பலி