கேரளா : கேரளா வரதட்சணை கொடுமை வழக்கில் விஸ்மயா கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை கொல்லம் நீதிமன்றம் விதித்தது. கிரண்குமாருக்கு கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.என்.சுஜித் தண்டனையை அறிவித்தார். ரூ.12.50 லட்சம் அபராதம் விதித்ததுடன் அதில் ரூ.2 லட்சத்தை பெண்ணின் பெற்றோருக்கு தரவும் ஆணை பிறப்பித்துள்ளது.