சென்னை: கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘என் இனிய தோழரும், கேரள முதல்வருமான பினராயி விஜயனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராகப் போராடவும், நாட்டின் ஒற்றுமைக்காக கேரளா தனது வலிமையைக் காட்டவும் வாழ்த்துகள்’’ என தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘மார்க்சிஸத்தின் தலை மாணாக்கர். அனைவர் நலனையும் அவாவுபவர். கேரள முதல்வர். வயதுக்கு மரியாதையைக் கூட்டுபவர். என் இனிய நண்பர் பினராயி விஜயனுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்து’’ என தெரிவித்துள்ளார்.