சென்னை: சிகிச்சைக்காக தந்தை டி.ராஜேந்திரரை வெளிநாடு அழைத்து செல்ல உள்ளதாக அவரது மகன் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். வயிற்றில் சிறிய ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால் உயர் சிகிச்சை தரவேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை கூறினார்கள் என்றும் டி,ராஜேந்தர் முழு சுய நினைவுடன் நலமாக உள்ளார் என்றும் சிம்பு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/1653396072_Tamil_News_5_24_2022_25448245.jpg)