பீஜிங்: சீன தலைநகர் பீஜிங்கில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் மாணவர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோரை வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பரவல் காரணமாக இரு மாதங்களுக்கு மேலாக பகுதி ஊரடங்கு அமலில் உள்ளது. 4.80 லட்சம் பேர் வீடுகளில் முடங்கியுள்ளனர். 15 லட்சம் பேர் குறிப்பிட்ட பகுதி வரை செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லேசான கட்டுப்பாட்டில், 2.12 கோடி பேர் உள்ளனர்.இந்நிலையில் சீன தலைநகர் பீஜிங்கில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. நேற்று, சராசரி பாதிப்பு எண்ணிக்கை, 50லிருந்து 99ஆக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து அலுவலக ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோர் வீட்டில் இருந்து பணியாற்றவும், படிக்கவும் பிறப்பித்த உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக, பீஜிங் நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் பரவலான கொரோனா பரிசோதனைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏராளமான குடியிருப்பு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், ஷாங்காயை ஒப்பிடும்போது பீஜிங்கில் கட்டுப்பாடுகள் குறைவு.
Advertisement