சீனா-வின் ஆதிக்கத்தை உடைக்க அமெரிக்கா திட்டம்.. இந்திய உட்பட 12 நாடுகள் உடன் கூட்டணி..!

சீனா-வின் ஆதிக்கத்தை உடைக்க அமெரிக்க திட்டம்.. இந்திய உட்பட 12 நாடுகள் உடன் கூட்டணி..!

சர்வதேச பொருளாதாரம், வர்த்தகம் ஆகியவை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது, குறிப்பாக ரஷ்யா – உக்ரைன் போருக்கு பின்பு உலக நாடுகள் மத்தியில் நட்புறவிலும் விரிசல் உருவாக்கியுள்ளது.

டிவிட்டரை விட்டு தெறித்து ஓடிய 3 அதிகாரிகள்.. ஆட்டம் காணும் அஸ்திவாரம்..!

இந்த நிலையில் சரி செய்யவும், வர்த்தகம், பொருளாதாரம், வளர்ச்சி ஆகியவற்றை வேகப்படுத்த அமெரிக்க அரசு தலைமையில் புதிய பொருளாதாரக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.

12 நாடுகள் கூட்டமைப்பு

12 நாடுகள் கூட்டமைப்பு

அமெரிக்க அரசின் முயற்சியின் கீழ் தொடங்கப்பட்ட வர்த்தகக் கட்டமைப்பில் தூய்மையான எரிசக்தி, விநியோகச் சங்கிலி மற்றும் டிஜிட்டல் வர்த்தகம் போன்ற துறைகளில் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளிடையே ஆழமான ஒத்துழைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட கூட்டமைப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் நேர்ந்திர மோடியுடன் இணைந்து அறிமுகம் செய்தனர்.

 இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு

இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு

அமெரிக்கா அறிமுகம் செய்யும் இந்த இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு (ஐபிஇஎஃப்) பொருளாதாரச் செழுமைக்காக வெளியிடப்பட்டது. இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க வலுவான பொருளாதாரக் கொள்கை அடிப்படையில் இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

டோக்கியோ
 

டோக்கியோ

இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் (ஐபிஇஎஃப்) செழுமைக்கான ஆலோசனைகளைத் துவங்குவதற்காக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

12 நாடுகள்

12 நாடுகள்

இந்த நிகழ்வில் அமெரிக்கா, இந்தியா-வை தவிர இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பில் இருக்கும் ஆஸ்திரேலியா, புருனே, இந்தோனேசியா, தென் கொரியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய 12 கூட்டணி நாடுகளின் தலைவர்கள் உடன் விர்ச்சுவல் முறையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

இந்த அறிமுக விழாவில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உலகப் பொருளாதார வளர்ச்சியின் இயந்திரமாக மாற்றுவதற்கான கூட்டு முயற்சியே இந்த ஐபிஇஎஃப் அறிவிப்பு என்று பிரதமர் மோடி கூறினார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதாரச் சவால்களைச் சமாளிக்கப் பொதுவான மற்றும் ஆக்கப்பூர்வமான தீர்வுகளைக் கண்டறிய இந்தக் கட்டமைப்பு மூலம் முடியும் என அறிவித்தார்.

சீனா

சீனா

இதேவேளையில் சீனா தனது பொருளாதார மந்த நிலையைச் சரி செய்ய வட்டி விகிதத்தைக் குறைத்து உற்பத்தி, டெக்னாலஜி, ரியல் எஸ்டேட் துறையை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளை எடுக்கத் திட்டமிட்டு உள்ளது. இதேவேளையில் சீனாவின் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிக்க ரஷ்யா முக்கியக் கூட்டணியாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Biden – Modi launched Indo-Pacific Economic Framework with 12 countries

Biden – Modi launched Indo-Pacific Economic Framework with 12 countries சீனா-வின் ஆதிக்கத்தைக் குறைக்க அமெரிக்கா திட்டம்.. இந்திய உட்பட 12 நாடுகள் உடன் கூட்டணி..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.