சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள்.., சட்டம்-ஒழுங்கு? எடப்பாடி கே பழனிச்சாமி கொந்தளிப்பு.!

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிச்சாமி கடந்த 21 ஆம் தேதி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், “நான் சட்டமன்றத்தில் காவல்துறை மானியத்தின் மீது பேசும்போது ரவுடிகளுக்கு காவல்துறையினர் மீது பயம் என்பது போய்விட்டது என்று பேசினேன்.

அதை உறுதி செய்வது போல் சென்னை-அமைந்தகரையில் 18.05.2022 அன்று பட்டபகலில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் ரவுடிகளால் பைனான்சியர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். 

காவல்துறையை தனது கையில் வைத்திருக்கும் முதல்வர் இனியாவது ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை சட்டப்படி சுதந்திரமாக நடக்க அனுமதிப்பாரா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்க்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, ‘தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நல்ல நிலைமையில் இருப்பதாக’ தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், எடப்பாடி கே பழனிச்சாமி இன்று தனது டிவிட்டர் பக்கத்தில், “சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன, இது போன்ற நிகழ்வுகளால் தலைநகர் கொலைநகராக மாறி,சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு  கேள்விகுறியாகி இருக்கிறது

காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் விடியா அரசின் முதல்வர் ஸ்டாலின், சட்டம் ஒழுங்கை சீர்ப்படுத்தாமல் பத்திரிக்கைகளின் கருத்துக்களை முடக்குவதிலே முழு முயற்சியுடன் இருப்பதால், தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.



 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.