சென்னை: தவறான திசையில் வாகனம் ஓட்டியதாக 22 நாட்களில் 22,990 வழக்குகள் பதிவு

சென்னை சாலைகளில் தவறான திசையில் வாகனம் ஓட்டியதாக 22 நாட்களில் 22,990 வழக்குகளை சென்னை போக்குவரத்து காவல்துறை பதிவு செய்துள்ளது.
சென்னை மாநகரில் போக்குவரத்து விதிகளை அமல்படுத்தும் வகையில், போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், விபத்துகளை குறைக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வாகன ஓட்டிகள் தவறான வழியில், எதிர் திசையில் வாகனங்களை ஓட்டுவது, மற்ற வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து விளைவிப்பது மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பது குறித்து சென்னை போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
Chennai: Traffic violators beware! You're being watched | Chennai News -  Times of India
01.05.2022 முதல் 22.05.2022 வரையிலான காலகட்டத்தில், தவறான திசையில் வாகனம் ஓட்டியதற்காக மொத்தம் 22,990 வழக்குகள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.நேரடி தொடர்பற்ற போக்குவரத்து அமலாக்கத்திற்காக 11 சந்திப்புகளில் 15 ANPR கேமராக்கள் பொருத்தபட்டுள்ளன. மேலும் அந்த கேமராக்கள் தவறான திசையில் வாகனம் ஓட்டும் விதிமீறல்களைக் கண்டறிந்து மீறுபவர்களுக்கு சலான்களை வழங்குகின்றன.
01.04.2022 முதல் 22.05.2022 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 17,944 வழக்குகளை ANPR கேமரா மூலம் IRTS-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ANPR கேமராக்களை நிறுவுவதற்கான 3 இடங்களை சென்னை போக்குவரத்து போலீசார் தேர்வு செய்துள்ளனர். அவை தமிழக அரசால் தற்போது நிதி நிலை அறிக்கையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
Tamil Nadu: Why Tamil Nadu is locking itself out of digital documentation |  Chennai News - Times of India
எனவே வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அவர்களின் விதி மீறல்கள் கேமராவில் பதிவு செய்யப்பட்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.