இந்தியாவின் நிதி தலை நகரமான மும்பை, வேலை தேடுபவர்களுக்கு மிகவும் பிடித்தமான நகரங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
வேலை வாய்ப்பு போர்டல் நாக்ரி. காம், வேலை தேடுபவர்களுக்கு மிக லாபகரமான நகரங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி.. இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்..!
கடந்த மார்ச் காலாண்டில் பணியமர்த்தலில் மும்பையில் 41 சதவீதம் வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது.
![சம்பள உயர்வு](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/212207-anukri-1653403590.jpg)
சம்பள உயர்வு
நாக்ரி அறிக்கையின் படி, தொற்று நோய்க்கு பிந்தைய காலத்தில் மகாராஷ்டிராவின் தலை நகர் சம்பள உயர்வில் 18% அதிகமான வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. இது மற்ற நகரங்களின் பெரு நகரங்களை விட கணிசமாக அதிகமாகும். இது சராசரியாக 11 சதவீதத்திற்கும் மேல் சம்பள உயர்வை பதிவு செய்துள்ளது.
![துறை வாரியாக பணியமர்த்தல்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/untitled-71-1653403599.jpg)
துறை வாரியாக பணியமர்த்தல்
இதுவே சராசரியாக பெங்களூரில் 15% வளர்ச்சியும், டெல்லியில் 12% வளர்ச்சியும், இந்தியாவில் 11% வளர்ச்சியும் பதிவு செய்துள்ளது.
இவ்வாறு பணியமர்த்தப்பட்டதில் வங்கி மற்றும் நிதி துறை, கல்வித் துறையில் 60% வளர்ச்சியும், ரியல் எஸ்டேட் துறையில் 57% வளர்ச்சியும், பார்மா துறையில் 34% வளர்ச்சியும், பிபிஓ துறையில் 22% வளர்ச்சியும் கண்டுள்ளன. இதில் குறிப்பாக மும்பை 41% வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது.
![எந்த துறையில் அதிகம்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/nakuri-logo-1653403608.jpg)
எந்த துறையில் அதிகம்
அதேபோல பிரெஷ்ஷர்களுக்காக தேவையானது 50% அதிகரித்துள்ளது. சம்பள அதிகரிப்பில் 33% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த பணியமர்த்தலில் வங்கிகள், நிதி சேவை மற்றும் இன்சூரன்ஸ் துறை மற்றும் கல்வித் துறையானது பணியமர்த்தலில் மிகப்பெரிய அளவு உள்ளது.
![தொலை தூரத்தில் இருந்தே பணி](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/hiring-gd5ae4c264-1280-sixteen-nine-1653403616.jpg)
தொலை தூரத்தில் இருந்தே பணி
அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு கடந்த ஆண்டினை காட்டிலும் 50% அதிகரித்துள்ளது. இளநிலை பட்டதாரிகளுக்கு மும்பையில் 75%மும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து பணிபுரிந்து வந்த ஊழியர்கள் தற்போது மீண்டும் பணிக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். எனினும் மும்பையில் தற்போதும் கூட வீட்டில் இருந்தே பணியாற்ற நிறுவனங்கள் அனுமதி கொடுத்துள்ளன. 4வது காலாண்டில் 11% பேர் தொலை தூரத்தில் இருந்தே வேலை பார்த்து வந்துள்ளதாக பதிவு செய்துள்ளது.
Naukri.com report says Mumbai sees 41% growth in hiring
Mumbai, the financial capital of India, is seen as one of the most favorite cities for job seekers. Recruitment in Mumbai grew by 41% in the March quarter.