பல்லடம் அருகே சைக்கிளில் சென்றவர் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் மாதப்பூரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் குடிநீர் பணி விநியோகிக்கும் வாட்டர்மேன் வேலை செய்து வந்துள்ளார். பணி முடிந்து தாராபுரம் சாலை வழியாக சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பொழுது பல்லடம் நோக்கிச் சென்ற இரு சக்கர வாகனம் அவர் மீது மோதியது. இந்த விபத்து நிகழ்ந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.