டெல்லியின் புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ள வினய் குமார் சக்சேனாவுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாக, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.
தலைநகர் டெல்லியின் துணை நிலை ஆளுநராக இருந்த
அனில் பைஜால்
, தனிப்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக, அண்மையில் அறிவித்தார். மேலும், இது தொடர்பான ராஜினாமா கடிதத்தையும் அவர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அனுப்பி வைத்தார்.
இதற்கிடையே, டெல்லியின் புதிய துணை நிலை ஆளுநராக, மத்திய காதி மற்றும் கிராமப்புற தொழில் துறை ஆணையத்தின் தலைவராக பணிபுரிந்து வந்த வினய் குமாரை நியமனம் செய்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இவர், 2016 முதல் 2020 வரை, பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கான பிரதமரின் விருதுகளை மதிப்பிடுவதற்கான குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக ஆண்டுதோறும் பிரதமரால் பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், சமூக வலைதளமான ட்விட்டரில், டெல்லி முதலமைச்சரும்,
ஆம் ஆத்மி
கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
டெல்லியின் புதிய துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ள வினய் குமார் சக்சேனாவை, டெல்லி மக்களின் சார்பில் முழு மனதாேடு வரவேற்கிறேன். டெல்லி மக்களின் நலனுக்காக, எனது அரசின் முழு ஆதரவையும் வழங்குவதாக அவருக்கு உறுதி அளிக்கிறேன்.
முன்னாள் துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுடன், டெல்லியில் பல திட்டங்களை நிறைவேற்றினோம். பல பிரச்னைகளைத் தீர்க்க முயற்சித்தோம். அவர் மிகவும் நல்ல மனிதர். அவரது நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக நான் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.