கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே, தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
கோலாப்பூரில் இருந்து பயணிகளுடன் நள்ளிரவு 1 மணியளவில் ஹூப்ளி – தார்வாத் பைபாஸில் பேருந்து சென்ற போது, எதிர் திசையில் அரிசி லோடு ஏற்றி வந்த லாரியின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியின் முன்பகுதியும் பேருந்தின் முன்பகுதியும் அப்பளம் போல நொறுங்கிய நிலையில், இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்கள், பயணிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.