தமிழகத்தில் திமுக ஆட்சியை ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி அல்ல என்று சேலத்தில் நடைபெற்ற ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி ஒருபோதும் ஆன்மீகத்திற்கு எதிரான கட்சியாக இருந்ததில்லை. இருக்கப் போவதுமில்லை. ஆன்மிகத்தின் பெயரால் திமுக ஆட்சி மீது சிலர் குறை சொல்லத் தொடங்கியுள்ளனர். குறை சொல்வதற்கு ஏதும் இல்லாததால், ஆன்மிகத்தின் பெயரால் ஆட்சி மீது அவதூறு பரப்புகிறார்கள்.
மேலும் திராவிட மாடல் எதையும் இடிக்காது, உருவாக்கும். யாரையும் புறக்கணிக்காது, அனைவரையும் அரவணைக்கும்.
திமுக கொடுத்த வாக்குறுதிகளை மக்கள் மறந்தாலும், நான் மறக்க மாட்டேன். தமிழக மக்களுக்காக என் சக்தியையும் மீறி உழைப்பேன் என பொதுமக்கள் மத்தியில் உறுதி அளிக்கிறேன் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.