தைவானை தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தென்சீன கடல் பகுதியில் அந்நாட்டு ராணுவம் அவ்வபோது போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இவ்வாறு தைவானுக்கு அச்சுறுத்தல் அளி்த்துவரும் சீனா, தற்போது ஒருபடி மேலே சென்று, தேவைப்பட்டால்
தைவான்
மீது ராணுவ பலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என்று அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த எச்சரிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது யூடியூப் சேனல்களில் கசிந்துள்ள சீன அதிபர்
ஜி ஜின்பிங்
பேசும் ஆடியோ. அதில்,’1.4 லட்சம் ராணுவ வீரர்கள், 950 கப்பல்களை தயார்படுத்துங்கள்’ என்று ராணுவத்துக்கு அறிவுறுத்தல் வழங்கும்படி சீன அதிபர் ஜின்பிங் பேசி உள்ளார்.
நரேந்திர மோடியை பாராட்டிய ஜோ பைடன் – என்ன காரணம்?
அத்துடன், அந்த ஆடியோவில் குவாங்டாங் மாகாணத்தில் ஆட்சி நிர்வாகித்தில் உள்ள உயர்நிலை அதிகாரிகள் போர் ஆயத்தங்கள் குறித்து பேசியுள்ள தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
ஜப்பானில் நடைபெற்றுவரும் குவாட் அமைப்பு மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோபைடன், ‘தைவான் மீது சீனா படையெடுத்தால், அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் களத்தில் இறங்கும்’ என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் சீன அதிபரின் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.