இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் வீடியோக்களும் வைரல் ஆகும் காலம் இது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் வீடியோ சூறாவளி போல சுழன்று வருகின்றன. இந்த முறை ஹூடி என்கிற தொப்பியுடன் கூடிய டீ சர்ட் அணிந்து டான்ஸ் ஆடும்போது எப்படியோ மாயாஜாலமாக ஹூடியின் நிறத்தை மாற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் இந்த வீடியோவை பார்த்து குழப்பமும் ஆச்சரியும் அடைந்துள்ளனர். இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள், ஹூடியின் நிறம் எப்படி மாறுகிறது என்று கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
இந்த வீடியோவைப் பார்த்து, ஹூடியின் நிறத்தில் எப்படி மாற்றம் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்க முடியுமா என்று பாருங்கள்.
இந்த வீடியோவில், எடிட்டர் கிறிஸ்டியன் கெஸ்னியல் வேறு நிற ஹூடி அணிந்து ராப் பாடலுக்கு நடனமாடுகிறார். ஆனால், அவர் அணிந்திருக்கும் ஹூடியின் நிறம் ஊதா, நீலம், பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் வேறுபடுகின்றன.
ஹூடியின் நிறம் மாறும் இந்த வீடியோவின் தொடக்கத்தில், கிறிஸ்டியன் முன்னால் பச்சை நிற ஹூடி அணிந்திருப்பதைக் காணலாம். நடனம் தொடங்கியவுடன், பச்சை நிற ஹூடி நீல நிறமாக மாறுவது போல் தெரிகிறது. ஆனால் வீடியோ முடிவடையும் போது ஹூடி மீண்டும் பச்சை நிறமாக மாறுவதை கண்டுபிடிக்கவே முடியவில்லை. நீங்களே பாருங்கள் வர்ண ஜாலத்தை.
கிறிஸ்டியன் கெஸ்னியல் ஹூடியின் நிறத்தை எப்படி மாற்றினார் என்பதை சமூக ஊடகப் பயனர்களுக்குச் சொல்லும் யூடியூப் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கிறிஸ்டியன் கூறுகையில், “நான் சட்டையின் உண்மையான நிறமான பச்சை நிறத்தை தனிமைப்படுத்துவதற்காக நான் அதை வண்ணமயமாக்கினேன்.” என்று கூறுகிறார். அவர் சொல்வதைக் கேட்டு நீங்களும் இதுபோன்ற வீடியோவை உருவாக்க நீங்களும் முயற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“