ரஷ்யாவை தோற்கடிக்க உக்ரைனுக்கு உதவ நேட்டோ நாடுகள் ஆயுதங்கள் வழங்கத் துவங்கிவிட்ட நிலையில், நேட்டோ அமைப்பு வழங்கிய ஆயுதம் ஒன்றின் உதவியால் ரஷ்ய இராணுவத் தளம் ஒன்றை உக்ரைன் சிதறடிக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
நேட்டோ வழங்கிய howitzer என்னும் ஆயுதத்தின் உதவியால், 20 கிலோமீற்றர் தொலைவுக்கப்பால் இருந்து தாங்கள் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் வீரர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அப்படி 20 கிலோமீற்றர் தூரத்திலிருந்து வீசப்பட்ட குண்டு, சரியாக ரஷ்ய இராணுவத் தளம் ஒன்றை தாக்கியதில், ரஷ்ய இராணுவத்துக்குச் சொந்தமான SUV வாகனம் ஒன்று அழிக்கப்பட்டதுடன், ரஷ்யப் படையினர் பலரும் கொல்லப்பட்டுள்ளார்கள்.
தங்களிடம் நேட்டோ ஆயுதங்கள் இருந்தால், தாங்கள் என்ன செய்வோம் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்கள் உக்ரைன் வீரர்கள்.