பஞ்சாப் மாநில சுகாதாரத் துறை அமைச்சரான விஜய் சிங்லா ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதை அடுத்து, பதவியில் இருந்து நீக்கம் செய்து அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்நிலையில், பகவந்த் மானின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை குறித்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
பகவந்த் மான் உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். உங்கள் செயல் என் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. இன்று முழு தேசமும் ஆம் ஆத்மியை நினைத்து பெருமை கொள்கிறது.
மக்கள் கண்ணீர் வடித்தார்கள். ஆனால் எதிர்க்கட்சிகள் குழப்படைந்தனர். ஊழல் இல்லாமல் ஒரு கட்சி எவ்வாறு செயல்பட முடியும் என்பதை எதிர்க்கட்சிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாம் நம்மை தியாகம் செய்யலாம். ஆனால் நாட்டை ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. ஊழல் குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சர் கைது- பதவி நீக்கம் செய்து பஞ்சாப் அரசு அதிரடி நடவடிக்கை