பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்; சீமான் ஒரு பாலியல் குற்றவாளி என மீண்டும் எம்பி ஜோதிமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கரூரில் எம்பி. ஜோதிமணி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், ராஜீவ் காந்தி குறித்து நாம் தமிழர் கட்சி சீமான் பேசியதற்கு பதில் சொன்ன எனக்கு தனிப்பட்ட வகையில் ஆபாசமாக பதில் கூறியிருக்கிறார் அவர். நடிகை விஜயலட்சுமி சீமான் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். அதில் உண்மை இல்லையென்றால் இது குறித்து சீமான் நீதிமன்றத்தில் ஏன் நஷ்ட ஈடு வழக்கு போடவில்லை? அரசியலுக்கு வரும் பெண்கள் மீது ஆபாச தாக்குதல் நடத்தினால் பயந்து ஓடிவிடுவார்கள் என நினைக்கிறார்கள். எனக்கு இது புதிதல்ல; பாஜகவின் பி டீம்தான் நாம் தமிழர் கட்சி.
கரூர் தொகுதி மக்கள் மானங்கெட்டு ஜோதிமணிக்கு வாக்களித்துள்ளனர் என கூறியுள்ளார். இதற்கு சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். கரூர் மக்கள் உழைத்து வாழக்கூடியவர்கள். சீமான்போல இலங்கை தமிழ் மக்களை, தமிழர்களை சுரண்டி ஆடம்பர, உல்லாச வாழ்க்கை வாழக்கூடியவர்கள் இல்லை. கரூர் மக்களை குறித்துப் பேச சீமானுக்கு அருகதை இல்லை.
சீமான் மீது பாலியல் வழக்கு, நீதிமன்ற தீர்ப்பு இல்லை எந்த அடிப்படையில் சீமானை பாலியல் குற்றவாளி என கூறுகிறீர்கள் என்ற கேள்விக்கு…
நடிகை விஜயலட்சுமி பொதுவெளியில் சீமான் மீது ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இதற்கு ஏன் சீமான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவில்லை. பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம். சீமான் பாலியல் குற்றவாளி இதற்கு என் மீது கூறியதே சாட்சி என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM