சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு டிவிட்டரில் நேற்று பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளதாவது:கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக போராடவும், நாட்டின் ஒற்றுமைக்காக கேரளா தனது வலிமையைக் காட்டவும் வாழ்த்துகள். இவ்வாறு கூறியுள்ளார்.