12 நாட்களுக்கு மேல் காணாமல் போன பாடகி சங்கீதா சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
ஹரியானாவை சேர்ந்தவர் சங்கீதா. இவர் பிரபல பாடகியாவார். டெல்லியில் வசித்து வந்த சங்கீதாவை காணவில்லை என்று மே 11ம் திகதி அவரின் குடும்பத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சங்கீதா கடத்தப்பட்டதாக பின்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ஹரியானா மாநிலம் பைனி பைரன் கிராமத்தில் ஒரு பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
ரஷ்ய வீரர்கள் பீதியுடன் செய்யும் பணி! உக்ரைனில் இருந்து வெளியான அதிகாரபூர்வ புகைப்படங்கள்
விசாரணையில் சடலமாக கிடந்தது சங்கீதா தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது, புதைக்கப்பட்ட நிலையிலேயே சடலத்தை பொலிசார் கண்டுபிடித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் 2 பேரை கைது செய்தார்கள்.
சங்கீதாவை திட்டமிட்டு கொலை செய்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
இசை வீடியோ எடுப்பதாக சங்கீதாவை வரவழைத்து கொலை செய்திருக்கிறார்கள். சங்கீதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்த பிறகு இந்த வழக்கு டெல்லி போலீசுக்கு மாற்றப்படும்.
சங்கீதாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர் என பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.