டோக்கியோ: புத்தர் காட்டிய வழியை உலகம் இன்றைக்கு பின்பற்ற வேண்டிய நிலை உள்ளது என பிரதமர் மோடி ஜப்பானில் இந்தியர்கள் மத்தியில் பேசினார்.
இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, டோக்கியோவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, புத்தர் காட்டிய வழியை உலகம் இன்றைக்கு பின்பற்ற வேண்டிய நிலை உள்ளது. வன்முறை, அராஜகம், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், என உலகம் இன்று எதிர்கொள்ளும் சவால்களில் இருந்து மனித குலத்தை காப்பாற்ற அதுவே வழி.
பல ஆண்டுகளாக இங்கே வாழ்ந்து ,இந்த நாட்டின் கலாச்சாரத்தை உள்வாங்கி இருந்தாலும், இந்திய கலாச்சாரத்தின் மீதான உங்கள் ஈடுபாடு வளர்ந்து வருவது கண்டு மகிழ்கிறேன். நீங்கள் இந்தியாவுக்கு செல்ல வேண்டும். இந்தியாவுடன் இணைய வேண்டும்.
மும்பை – அகமதாபாத் அதி வேக ரயில் திட்டம், டெல்லி, மும்பை தொழில் வழித்தடம் போன்றவை இந்திய – ஜப்பான் ஒத்துழைப்பிற்கு மாபெரும் உதாரணம் . இந்தியாவும் ஜப்பானும் இயற்கையான கூட்டாளிகள் . இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பான் மிக முக்கிய பங்குவகிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement