சென்னை:
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ் சமூகத்தின் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் செயல்பட்டு தமிழர்களுக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் உழைத்தவர் சி.பா ஆதித்தனார். ஆனால் இப்போது தமிழ் மண்ணை ஆக்கிரமிக்க நினைக்கிறார்கள் அதற்கு எதிராக நாம் உறுதிமொழி எடுக்க வேண்டும்.
பேரறிவாளனை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆரத்தழுவி வரவேற்றதை பலரும் கண்டித்து வருகின்றனர் என்ற கேள்விக்கு, உச்சநீதி மன்றமே அவரை விடுதலை செய்துள்ளது எனவே தான் முதல்வர் அவரை ஆரத்தழுவி வரவேற்றார்.
மேலும் நீதிமன்றத்தில் அவரை நிரபராதி என குறிப்பிடவில்லையே என்ற செய்தியாளரின் கேள்விக்கு அவர் குற்றவாளி எனவும் நீதிபதி தெரிவிக்கவில்லை. அதை நாம் நிரபராதி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். அரசியல் காரணம் சொல்லி நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்யவில்லை சட்டப்படி விடுதலை செய்துள்ளதால் பேரறிவாளன் குற்றமற்றவர் என தெரிவித்தார்.