பொதுவாக இன்றைய காலத்தில் சிறுவர்கள், பெரியவர்கள் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது ஒன்று தான் பொடுகு.
குறிப்பாக, இளம் வயதினருக்கு பல நேரங்களில் தர்மசங்கடத்தைத் தரும் ஒன்று. இதைக் கண்டுகொள்ளாமல் விட்டால், முடி உதிர்வு ஏற்படும்; தலை வழுக்கையாகவும் வாய்ப்பு உண்டு.
வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவை பொடுகு பிரச்னை உருவாக முக்கிய காரணங்கள்.
இதனை எளிய முறையில் கூட போக்க முடியும். அந்தவகையில் பொடுகை நீக்க கூடிய சில எளிய வழிமுறைகளை இங்கே பார்ப்போம்.
- வேப்ப எண்ணெய் – 1 டீஸ்பூன், ஆப்பிள் சீடர் வினிகர் – 2 டீஸ்பூன்
இரண்டையும் கலந்து உச்சந்தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு ஷவர் கேப் போட்டு 20 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பு கொண்டு அலசவும் பொடுகு சட்டென்று நீங்கும்.
- வழக்கமானது
வழக்கமான ஷாம்புவில் அரை டீஸ்பூன் வேப்பஎண்ணெய் சேர்க்கவும். பாட்டிலை அசைத்து உச்சந்தலையில் மசாஜ் செய்து விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். வாரம் ஒருமுறை இந்த ஷாம்புவை பயன்படுத்தலாம்.
- ஆலிவ் எண்ணெய் – 1 டீஸ்பூன்
வேப்ப எண்ணெய் – 1 டீஸ்பூன் ஆலிவ் ஒன்றாக கலக்கவும். இதை உச்சந்தலையில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பிறகு 2 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பு கொண்டு கழுவவும். -
வேப்ப எண்ணெய் சில துளி,
பிரிங்கிராஜ் பொடி – 1 டீஸ்பூன்
, சிகைக்காய் பொடி – 1 டீஸ்பூன் , வெந்தயப்பொடி – 1 டீஸ்பூன் அனைத்தையும் சுத்தமான கிண்ணத்தில் கலந்து இதை உச்சந்தலையிலும் முடியிலும் தடவி விடவும். பிறகு 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து மைல்டான ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும். - 2
எலுமிச்சை தோலை மசித்து சில துளி வேப்ப எண்ணெயுடன் கலந்து நன்றாக குழைக்கவும். இதை உச்சந்தலை மற்றும் கூந்தலில் முழுவதுமாக தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பிறகு மந்தமான நீரில் கழுவினால் பொடுகு போயே போச்சு.
- சில துளிகள் வேப்ப எண்ணெயை 1 கப் தயிரில் கலந்து நன்றாக குழைத்து பேஸ்ட் ஆக்கவும். தலைமுழுக்க போட்டு 30 நிமிடங்கள் வைத்திருந்து பிறகு இலேசான ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும்.
- வேப்ப எண்ணெய் – சில துளிகள், கெரியர் எண்ணெய் – 2 டீஸ்பூன் இவை இரண்டு எண்ணெய்களையும் கலந்து உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு ஷவர் கேப் அணிந்து 30 நிமிடங்கள் அப்படியே விட்டு இலேசான ஷாம்பு கொண்டு அலசவும். இவையெல்லாமே பொடுகை பாதிப்பில்லாமல் நீக்கும்