கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து மருதானை பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரை தாக்கி பொலிஸ் வாகனத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் மருதானை பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளாகிய பொலிஸ் அத்தியட்சகர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தின் பின்னர் வாகனத்தின் உதிரிபாகங்களை எடுத்து சென்றுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.