இந்தியாவில் சிறு மீன்களான சிறு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மோசமான நிலையை எதிர்கொண்டு வரும் பெரிய மீன்கள் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு வர்த்தகத்தை மிகவும் வேகமாக விரிவாக்கம் செய்து சிறு நிறுவனங்களின் வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர்களைக் கைப்பற்றி வருகிறது.
குறிப்பாக அதிகப் பணப் பலம் கொண்ட முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள், பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்கள் மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்த துவங்கியுள்ளது.
ஆர்பிஐ: 6 விண்ணப்பங்கள் ரத்து.. பிளிப்கார்ட் சச்சின் பன்சால்-க்கு பின்னடைவு..!
டிஜிட்டல் வர்த்தகச் சேவை
இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் மற்றும் பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்கள் ஏற்கனவே டிஜிட்டல் வர்த்தகத்தைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வந்தாலும், கடந்த ஒரு வாரமாக இந்த விரிவாக்க பணிகள் வேகமாக நடந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
பிளிப்கார்ட்
அந்த வகையில் ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் ஏற்கனவே பல வர்த்தகத் துறைகளில் இயங்கி வந்தாலும், தற்போது புதிதாக ஹோம் சர்வீசஸ் வர்த்தகத்தில் இறங்கியுள்ளது. இதன் மூலம் இத்துறையில் நீண்ட காலமாக மோனோபோலியாக ஆதிக்கம் செய்து வரும் Urban company-க்கு (UrbanClap) போட்டி உருவாகியுள்ளது.
முக்கியப் பிரச்சனைக்குத் தீர்வு
பெரு நகரங்களில் எலக்ட்ரிஷன், ப்ளம்பர், கிளினீங் போன்ற வீட்டில் செய்யக்கூடிய பணிகளைத் தான் ஹோம் சர்வீசஸ் வர்த்தகத்தில் வருகிறது. தற்போது பெரு நகரங்கள் முதல் சிறு நகரங்கள் வரையில் அனைத்து இடத்திலும் இத்தகைய பணிகளைச் செய்ய ஆட்களைப் பிடிப்பது என்பது சாதாரணக் காரியம் இல்லை, குறிப்பாகப் பெரு நகரங்களில் சுத்தம்..
Urban company ஆதிக்கம்
இந்த இடைவெளியை உணர்ந்து உருவான நிறுவனம் தான் Urban company, டிமாண்ட் மற்றும் மோனோபோலி ஆதிக்கத்தைக் கொண்டு இருக்கும் காரணத்தால் தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தி ஆதிக்கம் செலுத்தி வந்த Urban company-க்குப் போட்டியாகப் பிளிப்கார்ட் வந்துள்ளது.
பிளிப்கார்ட் திட்டம்
பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது ஹோம் சர்வீசஸ் வர்த்தகத்தில் முதற்கட்டமாக ஏசி சர்வீசிங் சேவையைச் சில வருடங்களுக்கு முன்பு after-sales services-க்காகக் கைப்பற்றப்பட்ட jeeves என்னும் நிறுவனத்தின் வாயிலாகப் பெங்களூர் மற்றும் கொல்கத்தாவில் துவங்கியுள்ளது.
ஆட்டம் ஆரம்பம்
விரைவில் பிற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. விரைவில் வாஷிங் மெஷின் ரிப்பேர் போன்ற பல சேவைகளைப் பிளிப்கார்ட் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. Urban company-க்குப் போட்டியாகச் சிறு குறு நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில் முதல் முறையாகப் பிளிப்கார்ட் போன்ற பெரிய நிறுவனம் களத்தில் இறங்கியுள்ளது.
Flipkart entering home services business competes with Urban company; starts AC servicing in Bangalore
Flipkart entering home services business competes with Urban company; starts AC servicing in Bangalore மகா பிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா… பிளிப்கார்ட்-ன் புதிய சேவை..!