மதுரை – தேனி இடையே 12 ஆண்டுகளுக்குப் பின் வரும் 27ஆம் தேதி ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்காக, 2010ஆம் ஆண்டில் அந்த பாதையில் ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், பணிகள் தாமதமடைந்ததால், சேவை தொடர்வது தாமதமானது.
இந்நிலையில், அந்த ரயில் சேவையை வருகிற 26ஆம் தேதி பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைக்க உள்ளதை அடுத்து, மே 27 முதல் போக்குவரத்து தொடங்குமென என தெரிவிக்கப்பட்டுள்ளது.