உத்திரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியின்போது மாப்பிள்ளையின் விக் கழன்று விழுந்ததால், ஆத்திரமடைந்த மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார்.
உன்னாவ் மாவட்டத்தில் திருமணத்திற்கு முந்தையநாள் மாலை அதற்கான அனைத்து சடங்குகளும் முடிந்த நிலையில், மணமகன் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, எதிர்பாராவிதமாக அவரது தலையில் இருந்த ‘விக்’-கும் கழன்று விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணமகள், அவரைத் திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்தார்.
அவரது குடும்பத்தினர் சமாதானப்படுத்த முயன்றும் மணமகள் தொடர்ந்து மறுத்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது.