உக்ரைன் – ரஷ்யா இடையே மூன்று மாதங்களைக் கடந்தும் போர் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தன்னையும் தன் குடும்பத்தாரையும் ரஷ்ய ராணுவம் கொல்ல நெருங்கியதாகத் தெரிவித்திருந்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து புதினின் உடல்நிலை குறித்தும் பல செய்திகள் பேசப்பட்டுவந்தான.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/6270cab6e23d9.jpeg)
இந்த நிலையில், உக்ரைனின் பாதுகாப்பு உளவுத்துறையின் தலைவரான மேஜர் கைரிலோ புடானோ உக்ரைன் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பரபரப்பான தகவல்களை வழங்கியிருக்கிறார். அதில், “புதினைப் படுகொலை செய்ய ஒரு முயற்சி நடந்தது. ஆனால் அந்த முயற்சி தோல்வியுற்றது. இது வெகுநாள்களுக்கு முன்பு நடந்தது அல்ல. சுமார் இந்த கொலை முயற்சி நடந்து 2 மாதங்கள்தான் ஆகியிருக்கும். அந்த கொலை முயற்சி எந்த சிக்கலும் இல்லாமல் சிறப்பாக நடந்தது. ஆனால் புதினுக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த திரவத்தை அப்புறப்படுத்திவிட்டார்கள் எனத் தகவல் வந்தது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/61f3c3b87bb33.jpg)
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பதவியைக் கவிழ்க்கச் சதி நடக்கிறது, அதைத் தடுக்க முடியாது. ஆகஸ்ட் மாதம் உக்ரைன் போர் ஒரு திருப்புமுனையை எட்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவின் தலைமை மாற்றத்திற்கு அது வழிவகுக்கும். ரஷ்ய அதிபர் 2017-லிருந்து குறைந்தது ஐந்து கொலை முயற்சிகளிலிருந்து உயிர் பிழைத்துவிட்டார். ஆனாலும், அவர் தனது பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.