எரிபொருட்கள் இல்லாமல், வயல் உழுதல் மற்றும் பயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ள விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம், எதிர்வரும் இரு தினங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்று விவசாயத்துறை மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதியளித்துள்ளார்.
அதன்படி விவசாயிகளுக்கு கலன்களுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். விவசாய அமைச்சில் நேற்று கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.