வெளிநாட்டுக்கடன் மறுசீரமைக்காக சட்ட ஆலோசனைகளை சர்வதேச நிறுவனத்திடம் பெற்றுககொள் அரசாங்கம் தீர்மானம்
இலங்கையினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள வெளிநாட்டுக்கடனை மறுசீரமைப்பை மேற்கொள்வது தொடர்பில் தேவையான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக உலகின் முன்னணி நிதி மற்றும் சட்ட ஆலோசனை நிறுவனமான யின் சேவையை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
04. இலங்கை அரசின் வெளிநாட்டு படுகடன்களை மீள்கட்டமைப்பதற்காக சர்வதேச நிதியியல் மதியுரைஞர் மற்றும் சர்வதேச சட்ட மதியுரைஞர் சேவைக்கான பெறுகைக் கோரல்
இலங்கை அரசின் வெளிநாட்டு படுகடன்களை மீள்கட்டமைப்பதற்காக சர்வதேச நிதியியல் மதியுரைஞர் சேவை மற்றும் சர்வதேச சட்ட மதியுரைஞர்; சேவைக்கான பெறுகைக் கோரலுக்காக இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக கோரப்பட்ட விலைமனுக்களுக்கமைய, நிதியியல் மதியுரைஞர் சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக 28 முன்மொழிவுகளும், சட்ட மதியுரைஞர் சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக 23 முன்மொழிவுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கமைய, குறித்த இரண்டு பெறுகைகளுக்கமைய அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நடவடிக்கைக் குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் கீழ்க்காணும் வகையில் குறித்த பெறுகைகளை வழங்குவதற்காக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• சர்வதேச நிதியியல் மதியுரைஞர் சேவைக்கான பெறுகை பிரான்ஸ் M/s Lazard நிறுவனத்திற்கு வழங்குதல்
• சர்வதேச சட்ட மதியுரைஞர் சேவைக்கான பெறுகை பிரான்ஸ் M/s Clifford Chance LLP நிறுவனத்திற்கு வழங்குதல்